
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால் சட்டமன்றம் எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? அவற்றை கலைத்து விடலாம் என்று தெரிவித்தார். அமலாக்கத்துறை சோதனை செய்ததால் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தற்போது பிரதமர் மோடியை சந்திக்க செல்கிறார். 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்த ஆண்டு மட்டும் செல்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.