இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் சாலையில் நடந்து சென்ற நபரை காளை மறைத்து நிற்கிறது. இதனால் அந்த நபர் நகர்ந்து தள்ளி வர முயற்சிக்கிறார். ஆனால் காளை அதற்குள் அந்த நபரை தாக்குகிறது. இதில் அவர் கடையின் முன் இருந்த கால்வாயில் விழுகிறார். இதில் அவரது தலை மட்டும் கால்வாய்க்குள் கிடக்கிறது. உடம்பு பகுதி வெளியே இருக்கிறது. அதன் பின் சிறிது நொடியில் அவர் எழுந்து அங்கிருந்து தள்ளிச் செல்கிறார்.

இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த காளை அங்கிருந்து செல்கிறது. இதனை பார்த்த அந்த நபர் காளையின் பின்னே செல்கிறார். அப்போது அங்கு வந்து ஒருவர் அவரை தடுத்து நிறுத்துகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.