
குஜராத் மாநிலத்தில் Zomato டெலிவரி பெண் ஊழியர் ஒருவர் டெலிவரி செய்யும் போது தன் குழந்தையை பைக்கில் வைத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அந்த பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல அவசியம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை இருந்தால் வேலைக்கு செல்ல கஷ்டமாக இருந்தது எல்லா வேலைகளிலும் குழந்தையை கூட கொண்டு செல்ல முடியாது. Zomotoவில் டெலிவரி வேலை செய்து தன்னுடன் தன் குழந்தைகளையும் வேலைக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்து தன் கண் முன் தன் குழந்தைகள் இருப்பதால் மகிழ்ச்சியுடன் இந்த வேலையை செய்கிறேன் என்றார். பைக்கில் தன் குழந்தைகளை இந்த வேலைக்கு கொண்டு போகலாம் என்பதால் இந்த வேலையை தேர்ந்தெடுத்தேன் என கூறினார்.
இந்த செயலை பலரும் பாராட்டி அந்தப் பெண்மணிக்கு ஊக்கம் அளித்து வந்துள்ளனர் மற்றும் சிலர் அந்த வீடியோவில் அந்த பெண் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால், இனிமேல் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் உங்கள் வேலையை தொடரவும் என தனது கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
Salute to this brave and hardworking mother! Balancing motherhood and work, she delivers food while carrying her child. A true symbol of resilience and determination. Respect to all the women who never give up. 🙌 pic.twitter.com/K3XNRP6hi1
— Harsh Goenka (@hvgoenka) November 18, 2024