
டெல்லி முதலமைச்சர் அதிசி குடியேற இருந்த அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். துணைநிலை ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் தனது வீட்டிற்கு சீல் வைத்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். கட்டிடத்தின் கட்டுமானத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதால் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது.