
பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ரிது வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் பல வருடங்களாக வெளியாகாமல் கிடப்பில் இருந்தது, இதற்கு ஏராளமான பிரச்சனைகள் இருந்ததே இதற்கு காரணம் என்ற நிலையில், அனைத்தையும் சரி செய்து முதற்கட்டமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்திற்கான ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் என ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளையும் சரிவர செய்து வந்து நேற்றைய தினம் நவம்பர் 24 இல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில்,
கடைசி கட்டத்தில் மீண்டும் சில பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு நேற்று வெளியாகவில்லை. இதற்கு படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது X தளத்தில் ரசிகர்களிடையே வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், படத்தின் மீது அதீத எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இச்செய்தி ஏமாற்றத்தை தர, விரைவில் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக படத்தின் இயக்குனர் தெரிவித்த நிலையில், வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி எப்படியாவது திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று முழு வீச்சில் பட குழு செயல்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.