“பார்க்கிங் ” திரைப்படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேசுகையில் “மிகப்பெரிய வெற்றியைத் தரும் அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கு, இந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டேன். மலையாள படமான ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் வருவதுபோல், 2 கேரக்டர்களுக்குள் நடக்கும் ஈகோ சண்டை தான் கதை. இப்படம் நிச்சயம் வெற்றிபெறும்.

எம்.எஸ்.பாஸ்கர் சாருடன் வேலை செய்ய வேண்டுமென்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை” என தெரிவித்தார். ஏற்கனவே மன்சூர் அலிகானை தனக்கு மிகவும் பிடிக்கும், என்று கூறி லோகேஷ், லியோ படத்தில் மன்சூர் அலிகானுடன் பணியாற்றியது குறுப்பிடத்தக்கது.