தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். நடிகர் பிரபாஸ் தற்போது பாலிவுட் இயக்குனர் ஓம்ராவத் இயக்கத்தில் ராமாயண காப்பியத்தை மையப்படுத்தி உருவாகும் ஆதிபுருஸ் படத்தில் ராமராக நடித்து வருகிறார். இந்த படத்தில் சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ராமநவமி அன்று படக்குழு ஆதிப்ருஷ் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படகுழு அறிவித்துள்ளது. அதன்படி நாளை அதாவது மே 9-ம் தேதி ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் ஆதி புருஸ் படம் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.