தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அதன் பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இயக்குனர் லோகேஷ் தற்போது லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஜய்யும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடிக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து தலைவர் 171 படத்திற்கான போட்டோ சூட் நடந்து முடிந்துள்ளதாக தற்போது புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் ரஜினியின் கடைசி படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது போட்டோ சூட் நடந்து முடிந்துள்ளதாக வெளிவந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.