திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆயிரம் கொடி இருந்தாலும்,  திமு கழகம்  கொடிப் போல ஒரு கம்பீரம் வேற எந்தக் கொடிக்கும் கிடையாது. அந்தக் கொடி உருவானக் கதையை எங்களிடம் கலைஞர் கூறியிருக்கிறார். அவர் ஈரோட்டில் இருக்கிறப் பொழுது காலையில் கொடி ரெடியாகணும்னு நாலஞ்சு பேர் வேற ஏதோ பண்ணி இருக்காங்க.

ஆனால் கருப்பு சிவப்பு போட்டுட்டு அந்த சிவப்பில் ரத்தம் வேணும் என்பதற்காக கையைக் கிழித்து ரத்தம் கொடுத்திருக்கிறார் கலைஞர். கலைஞருடைய ரத்தத்தில் உருவானது இந்த திராவிட முன்னேற்றத்தின் கொடி 1969-இல் கள்ளக்குறிச்சி மாநாட்டில் எனக்கு கொடியேற்றுகின்ற வாய்ப்புக் கொடுத்தார் அண்ணா. அந்த மாநாட்டில் நான் பேசினேன்.

இந்தக் கொடி கலைஞருடைய ரத்தத்தில் உருவானது. அப்போதே தலைவர் மத்தியில் எனக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. அதற்குப் பிறகு தலைவரை ஒருநாள் அவருடைய உடன்பிறப்பு மடலில் எழுதிய  பிறகுத் தான் அந்தக் Controversy அடங்கியது. ஆக நாம் எந்த தலைவரை நம்முடைய ஊரோடு, உயிரோடு கருதுகிறோமோ…  அந்த தலைவர் ரத்தத்தில் உருவாகின்ற பொழுது….  இதயம் அதற்காக மகிழ்ச்சி கொள்கிறது. அப்படிப்பட்ட கொடியை 100 அடியில் ஏற்றி இருக்கின்றீர்கள்.

அந்த கொடியேற்று முடிந்த பிறகு நான் நினைத்தேன்… இங்கே வந்து உக்கார்ந்து பார்த்தால்  ஏதோ சினிமா பாட்டை போடுவார் என்று நினைத்தேன்… ஆனால்   நானே பார்த்து… நானே பார்க்காத….  என் படத்தை போட்டு இவ்வளவு பெருமைப்படுத்தி இருக்கிறீர்களே…..

நான் என்ன சொல்லுவது ? இப்படி எல்லாம் செய்யுறீங்கன்னு கேட்டால், அப்போதே  நான் வந்து இருப்பேன். இதெல்லாம் எனக்கு முதல்ல சொல்ல… நீங்க வாறீங்க அண்ணே… கொடி ஏத்துறீங்க.. போறீங்க அண்ணே என சொன்னாங்க… இதான் எப்போது நடப்பது தானே என இங்கே வந்தேன்…இப்படி எல்லாம் பண்ணுறீங்கன்னா… விட்டுருவோமா ? நான் மட்டும் இல்லை…  எங்க ஊரில் இருக்கிறவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்து இருப்பேன்.  ரொம்ப அற்புதமாக இருந்தது என தெரிவித்தார்.