அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி கட்டண சலுகை 25 சதவீதம் உயருகிறது. குழந்தை கல்வி சலுகையாக மாதம் ரூ.2812.5, விடுதி கட்டண சலுகை ஆக ரூ.8437.5, திவ்யாங் குழந்தை பராமரிப்புக்கு ரூ.5,625 பெறுவர். இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.