மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. 50 சதவீத அகவிலைப்படி தற்போது வழங்கப்படும் நிலையில் புதிய DA விகிதங்கள் ஜனவரி முதல் ஜூன் 2024 ஆம் ஆண்டு வரை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து மத்திய அரசு ஊழியர்களின் ஆறு விதமான அலவன்ஸிலும்  மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது வீட்டு வாடகை கொடுப்பனவில் மூன்று சதவீதம் அதிகரிப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் HRA 27 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் மூன்று சதவீதம் அதிகரிக்கும். வீட்டு வாடகை கொடுப்பனவில் மூன்று பிரிவுகள் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நகரத்திற்கு ஏற்ப வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.