செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், என்னை  கழுத்தறுத்தாலும் எந்த அதிகார வர்க்கத்தினுடைய காலடியிலும் நான் போய் விழுந்ததில்லை, விடமாட்டேன்… இனி ஒரு காலம் அது நடக்காது என்பதை என்னுடைய சொல் அல்ல… என்னுடைய செயல்…. என்னுடைய கண் பார்வை…  இங்கு இருக்கிற உங்க எல்லாருக்கும்  தெரியும்… எவருக்கும் அடி பணிந்தோ, கால் புடிச்சோ..  அல்லது தயவு பண்ணியோ என் இனத்திற்கான செயல்பாடுகளில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். இப்பவும் சொல்றேன்….. தமிழீழம்   உறுதி செய்தால்,  இந்தியாவுக்கு நல்லது….  எங்களுக்கு நல்லது என்கிறது இருக்கட்டும்…  இந்தியா செய்யும்னு நாங்க நம்புறோம்…

இந்தியாவுக்கு செய்யாமலே போயிடுச்சுன்னா….  அதுக்காக தமிழீழம்  விட்டுடுமா என்ன ? அதனால இந்தியா சொல்லி அல்லது பாரதிய ஜனதா அரசாங்கத்திற்கு நாங்கள் கால் புடிச்சு,  கெஞ்சி…. அப்படியெல்லாம் ஒரு காலமும் இல்ல. நாங்க சொல்றது இந்தியாவும் நல்லா இருக்கணும் அப்படிங்கறது தான்…  இப்ப வரைக்கும் இந்த வரைபடத்தில் வாழ்ந்துட்டு இருக்கின்ற எங்களுக்கும் நல்லது…. குஜராத்தில் பூகம்பம் வந்தப்ப தமிழ்நாட்டில் இருந்து தான்…  பீகாரில் வெள்ளம் வந்ததுன்னு…  தமிழ்நாட்டிலிருந்து தான் அங்கு அதிக நிதி போச்சு. அதனால் மானுடத்தை காக்கிற பெரும் பணியை எடுத்துக் கொண்டு இருக்கின்ற தமிழினம்… இந்தியா நல்லா இருக்கணும்னு தலைவர்  பிரபாகரனும் நினைச்சாரு….

திருகோணமலையை கேட்டப்ப… இந்தியாவுக்கு ஆபத்து வரும்னு தான் அமெரிக்காவுக்கு கொடுக்கல…  இன்னைக்கு சிங்களவன் திருகோணமலையை சீனாவுக்கு கொடுத்துட்டான்….  அம்மான் தோட்டத்தை கொடுத்துட்டான்… அப்போ இந்தியா எங்களுடைய தந்தையர் நாடு என்று சொல்லுவாரு தலைவர் பிரபாகரன் அவர்கள்….  அவருடைய பிள்ளையும் இந்தியாவினுடைய நேசகரத்தோடு தன் இனத்தின் விடுதலையை அது தீர்மானிக்கணும்னு நினைக்குது….

அதனால் அவர்கள் எண்ணம் இது எங்கும் போது… என்ன  எதார்த்தமோ  அதைத்தான் நான் சொல்ல முடியும். என்னுடைய வெறுப்பையும் நான் கக்க முடியாது. என்னுடைய ஆசைகளையும் நான் அடிபணிந்து சொல்ல முடியாது. அதான் எதார்த்தம். இந்தியா நல்லா இருக்கட்டும். இந்தியா  நல்லா இருக்கணும்னா…  ஈழத்தில தமிழினம் அமையனும். அப்போ சீனா அந்த இடத்திலிருந்து…  தலைவர் பிரபாகரன் அவர்கள் வருகிற காலம் வந்திருச்சுன்னா….  அங்க இருந்து எத்தனை கூடாரங்கள் காலியாகுதுன்னு அன்னைக்கு தான் தெரியும் என தெரிவித்தார்.