தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சேஷு தற்போது ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் S.VE. சேகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ICU- வில் உள்ள சேஷுக்கு மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். மேலும் சேஷுவின் மகன் பெயருக்கு பணம் அனுப்பி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர் வங்கி கணக்கு எண் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.