தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் படு கிளாமராக நடித்துள்ளார். இந்நிலையில் தமன்னாவுடன் முதன்முதலில் டேட்டிங் சென்றது எப்போது என்பதை அவருடைய காதலர் விஜய்வர்மா பகிர்ந்துள்ளார்.

லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் 2 பேர் இடையேயான நெருக்கமான காட்சிகள், சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு 2 பேரும் காதலிப்பதாக ஒப்புக் கொண்டனர். இந்நிலையில், வர்மா அளித்துள்ள பேட்டியில், “லஸ்ட் ஸ்டோரிசில் நடிக்கும்போது டேட்டிங் செல்லவில்லை. 20-25 நாள்கள் கழித்து தான் டேட்டிங் சென்றோம்” என்றார்