
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான மோதலில் முஸ்தாபிசுர் ரஹ்மான் விலக வாய்ப்புள்ளது.
சிஎஸ்கே தற்போது ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன், இரண்டு வெற்றிகளும் அவர்களின் சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் பதிவு செய்தது. இந்நிலையில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் வெள்ளிக்கிழமை 5ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இன் அடுத்த ஐபிஎல் 2024 ஆட்டத்தை இழக்க வாய்ப்புள்ளது.
ESPNcricinfo இன் படி , முஸ்தாபிஸூர் 2024 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவினால் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைக்கான விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக வங்காளதேசத்திற்குத் திரும்பியுள்ளார். தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக தனது சொந்த நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பாஸ்போர்ட் கிடைத்தவுடன் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 26 அன்று ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கு சில நாட்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக முஸ்தாபிசுர் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளார். போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தி ஊதா தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
எனவே முஸ்தாபிஸூருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா விளையாடும் லெவன் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான சிஎஸ்கே கடைசி ஆட்டத்தின் போது, முஸ்தாபிஸூர் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை நிறைவு செய்தார், வங்கதேசத்திலிருந்து மைல்கல்லை எட்டிய 2வது பந்துவீச்சாளர் ஆனார்.
டெல்லிக்கு எதிரான போட்டியின் போது, முஸ்தாபிஸூர் ரன்களை விட்டுக்கொடுத்தார். 4 ஓவர்களில் 11.80 என்ற எகானமி விகிதத்தில் 47 ரன்கள் கொடுத்தார். இருப்பினும், டேவிட் வார்னரின் விக்கெட்டை அவர் எடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த ஆட்டம் முஸ்தாபிசுரின் முன்னாள் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது. இதன் விளைவாக, அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கமாட்டார். தொடர்ந்து சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம் ஏப்ரல் 8 ஆம் தேதி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறுகிறது. அமெரிக்க விசா நடைமுறையில் மேலும் தாமதங்கள் ஏற்பட்டால், முஸ்தாபிசுரும் இந்தப் போட்டியைத் தவறவிடக்கூடும்.
ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேசிய அணியில் சேர்வதற்கு முன்பு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஐபிஎல்லில் பங்கேற்க முஸ்தாபிஸூர் தகுதி பெற்றுள்ளார்.