ஐபிஎல்லில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன..

ஐபிஎல் 2023 இன் 37வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (CSK vs RR) இடையே நடைபெறுகிறது. அதே நேரத்தில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இதற்கு முன் மோதியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்னில் தோல்வியை தழுவியது.. புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (7ல் 5வெற்றி) முதலிடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (7ல் 4 வெற்றி) 3வது இடத்திலும் உள்ளன.

சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. சென்னை அணியில் டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணிக்காக கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். இதனுடன், கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2023 இன் மிகப்பெரிய ஸ்கோரை சென்னை பெற்றது. அதே சமயம் அந்த அணியின் பந்துவீச்சு துறையின் செயல்பாடும் பாராட்டுக்குரியது.

அதேசமயம் தனது கடைசி மோதலில் ஆர்சிபிக்கு எதிராக ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் நெருங்கி வந்துதோல்வியடைந்தனர். இருப்பினும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், படிக்கல், ஜூரல் சிறப்பாகசெயல்பட்டனர். சென்னைக்கு எதிராக ராயல்ஸ் அணி வெற்றிபெற வேண்டுமானால், அணியின் டாப் ஆர்டர் மற்றும் பந்துவீச்சு துறை சிறப்பாக செயல்பட வேண்டும்.

போட்டி விவரங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

நாள் மற்றும் நேரம்- ஏப்ரல் 27 வியாழன் இரவு 7.30 மணிக்கு

இடம் – சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர்

நேரடி ஒளிபரப்பு :

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இதனுடன், போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமாவில் செய்யப்படும்.

பிட்ச் அறிக்கை  :

சவாய் மான்சிங் மைதானத்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சு மற்றும் வேகத்தின் அடிப்படையில் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இதனால் இங்கு எந்த அணியாலும் 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.

இரு அணிகளிலும் விளையாடும் சாத்தியமான லெவன் :

ராஜஸ்தான் அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட் மயர், துருவ் ஜூரல், அஷ்வின், சாஹல், போல்ட், சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர்.

சிஎஸ்கே அணி : டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி,  ஜடேஜா, எம்எஸ் தோனி, பத்திரனா, தீக்ஷனா, தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்