ஐபிஎல்லில் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் என்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறமையை நிரூபிப்பதற்காக மட்டும் அல்ல.. தலைமைப் பண்புகளை மேம்படுத்த இது ஒரு நல்ல தளமாகும். விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் கேப்டன்ஷிப் திறமை ஐபிஎல்லில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிக வெற்றி விகிதம் கொண்ட கேப்டன் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன்கள் யார்? குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா 21 போட்டிகளில் கேப்டனாக இருந்தார். இதில் 15 போட்டிகளிலும் அவர் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 75 சதவீத வெற்றி விகிதத்துடன் மிக வெற்றிகரமான கேப்டன் ஆவார். கடந்த 2022 ஐபிஎல் அறிமுக சீசனிலேயே குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். தற்போது இந்த ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.. போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க விகிதம் மாறலாம்.

 

எம்எஸ் தோனியின் கேப்டன்சி பற்றி சொல்லவே வேண்டாம். 217 போட்டிகளில் தலைமை வகித்த தோனி, 128 போட்டிகளில் அணிக்குவெற்றியை பெற்று கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம் 58.99.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 51 போட்டிகளில் விளையாடியது. 30 போட்டிகளில் அணி வெற்றி பெற்றது. அவர் 58.82 வெற்றி சதவீதத்துடன் உள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்காக 43 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். இதில் 25 போட்டிகளில் அணி வெற்றி பெற்றுள்ளது. அவர் 58.82  விகிதத்துடன் உள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே 26 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். அவர் 15 போட்டிகளில் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார்.. தேர்ச்சி விகிதம் 57.69 சதவீதம்.

ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் 30 போட்டிகளில் விளையாடி உள்ளது. அவர் 17 போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். வெற்றி சதவீதம் 56.67. நடப்பு ஐபிஎல் சீசனில் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் விளையாடவில்லை.

மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 55 போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். அவர் 55.45 வெற்றி விகிதத்துடன் 30 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

ஹிட்மேன் ரோஹித் சர்மா 149 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். இதில் 81 ஆட்டங்களில் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளார். 54.36 வெற்றி விகிதம் உள்ளது.

கெளதம் கம்பீர் 129 முறை கேப்டனாக விளையாடி 71 முறை 55.42 என்ற வெற்றி சதவீதத்துடன் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஐபிஎல்-ல் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பெற்றதன் அடிப்படையில், RCB மற்றும் தற்போதைய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி RCB ஐ 143 முறை வழிநடத்தி 66 போட்டிகளில் (46.15) வெற்றி பெற வைத்துள்ளார்.

டேவிட் வார்னரின் வெற்றி சதவீதம் 50.00 ஆகும், ஏனெனில் அவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்காக 76 போட்டிகளில் கேப்டனாக இருந்து 37 போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட் 74 போட்டிகளில் கேப்டனாக 35 போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். அவரது வெற்றி சதவீதம் (47.29) பாராட்டுக்குரியது.

வீரேந்திர சேவாக் டெல்லி அணிக்கு 53 போட்டிகளில் கேப்டனாக இருந்து 28 போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். வெற்றி சதவீதம் 53.77 ஆகும்.

ஷ்ரேயஸ் ஐயர் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து 55 போட்டிகளில் 27 வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 50.90 ஆகும். தற்போதையை சீசனில் காயம் காரணமாக கொல்கத்தா அணிக்கு ஆடவில்லை..