ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 30ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் CSK- PBKS அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரூ.1500, ரூ.2,000, ரூ. 2,500க்கான டிக்கெட்டுகள் மைதானத்தின் கவுண்டரிலும் ரூ.3000 மற்றும் ரூ.5,000க்கான டிக்கெட்டுகள் ஆன்லைனிலும் கிடைக்கும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே அனுமதி.