இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் தோனியின் பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது twitter பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “CSK ‘THALA FOREVER’ தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு உங்களின் சாதனைகளும், பணிவும் பல இளைஞர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும்” என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.