கல்வி கருத்தாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிற்பதற்காக மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம் தான் புதிய பாரத எழுத்தறிவு திட்டம். கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் இந்த திட்டம் கடந்த கல்வியாண்டு அமல்படுத்தப்பட்ட நிலையில் 5.28 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் 4.80 லட்சம் பேருக்கு அடிப்படை கல்வியை பயிற்றுவிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது