தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை பூங்கா மற்றும் பல்வேறு இடங்களில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.