ஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் பகுதிகளிலும், இந்தியா பாகிஸ்தான் பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அந்த தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட்- ஹமாஸ் ஆதரவாளர் ரெஜாஸ் எம். ஷீபா சைதீக் என்ற இளைஞர், தனது இன்ஸ்டாகிராமில் ஆப்ரேஷன் சிந்தூரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அப்பதிவு சமூக ஊடகங்களில் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் காவல்துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு ஷீபா சைதீக்கை நாக்பூரில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.