
டெல்லியில் பெண் ஒருவர் தனது வழக்கமான பயணத்தை முடித்துவிட்டு, வீடு திருப்பும் போது ஆட்டோ ஓட்டுநர்களின் கூட்டத்தில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை பார்த்தார். இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் அவரது ஆட்டோவில் ஏற தயக்கமாக இருந்தாலும், அந்த பெண் ஓட்டுனரின் நம்பிக்கையும், நட்பான அணுகுமுறையும் அவரை ஈர்த்தது. பின்னர் அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டோவில் ஏற தீர்மானித்த அவர், பெண் ஓட்டுநர் நீலம் பற்றிய கதையை கேட்டார். அது அவருக்கு மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
நீலம் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை பகிர்ந்து கொண்டார். துணை இல்லாத கணவரும், ஆதரிக்காத மாமியார், மாமனார்களும் இருப்பதை பொருட்படுத்தாமல், தனது மகளுக்காக ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வெறித்தனமாக முயற்சி செய்கிறார். தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கையின் கட்டுப்பாட்டை தனது கைகளில் எடுத்துக் கொண்டு ஆட்டோ ஓட்டுனராக வலம் வருகிறார். அந்த பெண் பயணி, நீலத்தின் தன்னம்பிக்கையையும் உறுதியையும் பாராட்டினார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வைரலானதை, அடுத்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.