
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் தெரிவித்தார். ஆனால் அதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறியதாவது, நிஜ்ஜார் கொலை வழக்கில் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.
இந்தியா மற்றும் இந்திய தூதரகளுக்கு எதிராக எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க கனடா தற்போது வரை எந்த ஆதாரங்களையும் எங்கள் முன் வைக்கவில்லை. இந்த குற்றச்சாட்டால் இரு நாட்டுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இந்த சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என்று கூறியுள்ளனர்.