அமெரிக்க தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான மெட்டாவில், வருவாயை தவறாகப் பயன்படுத்திய 24 ஊழியர்கள் அண்மையில் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த ஊழியர்கள், தங்களுக்குக் கிடைத்த 25 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,101.26) உணவு கிரெடிட்டை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய பொருட்களில் பற்பசை, சலவை சோப்பு, இங்க், மற்றும் ஒயின் கிளாஸ்கள் போன்றவை அடங்குகின்றன.

இந்தச் சம்பவம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மெட்டா அலுவலகத்தில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், இந்த ஊழியர்கள் அந்தப் பொருட்களைப் பெற்று தங்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்கள் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.