
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊனம்பாளையம் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வேடியப்பன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலப் பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை ஒரு மாடு மிதித்தது.
இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மாட்டை காப்பாற்ற முயன்ற வேடியப்பன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.