சிவகங்கை மாவட்டம் சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக உரிமையாளர் தனது மாட்டுடன் வந்துள்ளார். அப்போது மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட மாடு தென்கரை கன்மாய் அருகில் சென்ற போது உள்ளே விழுந்துள்ளது. உடனே உரிமையாளர் அதனை பிடிக்க முயன்றுள்ளார்.

இதனையடுத்து மாடு கன்மாயில் விழுந்த நிலையில் அதனை காப்பாற்ற உரிமையாளர் முயன்றுள்ளார். அப்போது அவரின் கால் தாமரை கொடியில் சீக்கி உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கன்மாயில் மிதந்த மாடு மற்றும் உரிமையாளரின் உடலை மீட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.