சீன அரசு, கொரோனா பரவல் பிரச்சனையை அரசியலாக மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது.

சீன நாட்டில் உருமாற்றமடைந்த பிஎப்.7 என்ற கொரோனாவின் அலை அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். எனவே, உலக சுகாதார மையமானது கொரோனா தொடர்பில் சரியான தகவல்களை சீனா வெளியிட வேண்டும் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீன அரசாங்கத்தினுடைய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் மாவ் நிங், கொரோனா வைரஸிற்கு எதிராக நடக்கும் இந்த போரில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா தொற்று பரவலை அரசியலாக மாற்றும் செயல்கள் மற்றும் வார்த்தைகளை தவிருங்கள். கொரோனா பரவலை வெகு விரைவில் வெல்ல ஒற்றுமையை பலப்படுத்தி, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.