கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது பெரிய காப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தாமோதரன்(47), கிராம உதவியாளர் ரவீந்திர குமார பாண்டியன்(57) ஆகியோர் 2000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து ஞானபிரகாசம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாமோதரனையும், ரவீந்திரகுமார பாண்டியனையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தாமோதரனுக்கு மூன்று ஆண்டுகள் ஜெயிந்தனையும், 3000 ரூபாய் அபராதமும், ரவீந்திரகுமார பாண்டியனுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.