செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புத்தேரியில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்து கடலூரைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை எழிலரசின் நண்பர் விக்னேஷ் பாபு சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த விக்னேஷ் பாபு எழிலரசன் தூக்கில் சடலமாக தோன்றியதே கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று எழிலரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் எழிலரசன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை அடித்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே எழிலரசன் எழுதி வைத்ததாக கூறி ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தன்னை ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்க இயலவில்லை. எனவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என எழிலரசன் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.