கேரள மாநிலத்தில் பொதுவாக வனப்பகுதிகளில் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. எனவே அடிக்கடி காட்டு யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. வனப்பகுதியை சார்ந்து வீடுகள் உள்ளதால் கேரளாவில் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்று வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி பகுதியில் பைக்கில் குழந்தையுடன் சென்ற ஒரு தம்பதியினரை காட்டு யானை மூர்க்கத்தனமாக துரத்தியுள்ளது. இதில் அந்த தம்பதியினர் செய்வதறியாது பதட்டத்தில் வேகமாக பைக்கை ஓட்டி தப்பிச் சென்றனர். இதனை அப்பகுதியில் வந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.