செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வலிமைமிக்க கூட்டணியாக ( I.N.D.I.A ) இதை நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கிறோம். நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பாரதிய ஜனதா கட்சி எப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அதில் குறிப்பாக பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் எங்கே போனாலும்…. அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி….

கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி…. அல்லது தனிப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கு போனாலும்…. அங்கெல்லாம் இந்த ஒன்பது வருடமாக செய்து இருக்கின்ற சாதனையை பற்றி சொல்ல முடியாமல்,  சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாக சொல்ல முடியாத அளவிற்கு ஆளாகி நாங்கள் அமைத்துள்ள ”இந்தியா” என்ற கூட்டணியை பற்றி அவர் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆக சிறந்த பப்ளிகேஷன் ஆஃபிஸராக பிரதமரே செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதற்காக நாங்கள் எங்கள் கூட்டணியின் சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியில்…  பிஜேபி ஆட்சியில் எந்த சாதனைகளும் கிடையாது.நாளுக்கு நாள் இந்த ஆட்சி UN Popular  போய்க்கிட்டு இருக்கு. ஆனா இந்தியாவுடைய கூட்டணி Popular ஆகிட்டு இருக்கு. இந்த கூட்டத்தை பொருத்தவரைக்கும் இது ஒரு திருப்திகரமான கூட்டம் மட்டுமல்ல,  ஒரு திருப்புமுனை கூட்டமாக இந்த கூட்டம் அமைந்திருக்கு. பிஜேபி ஆட்சியினுடைய கவுண்டவுன் ஆரம்பம் ஆயிருச்சு என தெரிவித்தார்.