
நியூயார்க் நகரில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மருத்துவர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நியூயார்க் நகரில் மவுண்ட் சைனை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு லிலா அபாசி என்ற பெண் மருத்துவர் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் ஹமாஸ் வீடியோக்களுக்கு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் “ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா நீடிக்கட்டும்” என்று கருத்து பதிவு செய்துள்ளார். இவ்வாறு கருத்து பதிவிட்ட காரணத்திற்காக இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மருத்துவ வட்டாரங்களில் ஏற்கனவே இவர் மீது சர்ச்சைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இஸ்ரவேல் ராணுவத்தை “விபத்து நிலை நோய்” என்று விமர்சித்த இவர் ஹமாஸை “தன்னலமற்ற எதிர்ப்பு போராளிகள்” என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்ட நியூயார்க் நகர கவுன்சில் உறுப்பினர் இன்னா வெர்னிகோவ் இவரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். அதோடு “அதிகமாக எதிர்ப்புகளை உருவாக்கும் யூத விரோத மருத்துவர்களில் ஒருவர் இவர்” என்று மருத்துவர் அபாசியை இவர் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் “யூத நோயாளிகள் இனிமேல் இந்த மருத்துவரிடம் பாதுகாப்பாக சிகிச்சை பெறுவார்கள் என நம்ப முடியாது என “physicians against antisemitism” என்ற குழு கருத்து தெரிவித்துள்ளது.