நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு குழுக்கள் என்பது  எடப்பாடி பழனிச்சாமியால் அமைக்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் தொகுதி பங்கிட்டு குழு, பிரச்சார குழு, தேர்தல் அறிக்கை  தயாரிப்பு குழு, விளம்பர குழு  என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தொகுதி பங்கிட்டு குழுவுடைய ஆலோசனை கூட்டம் என்பது நடைபெறுகிறது.

தொகுதி பங்கீடு குழுவை பொறுத்த வரை ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ் பி வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகிய முன்னாள் அமைச்சர் அடங்கிய ஐவர் குழுவை அதிமுக பொதுச்செயலா எடப்பாடி பழனிச்சாமி அமைத்திருக்கிறார்.  முதலாவதாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாக  குழுவே தங்களுக்குள் பேசி அதிமு போட்டியிடத்திற்கு தயாராக உள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது. 28 நாடாளுமன்ற தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.