வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் ஏடிஎம் ஆக பார்க்குது, ஆனா பாஜக அதிர்ஷ்டமாக பார்க்கிறது என பிரதமர் மோடி பேசி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் வருகின்ற 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அதில் வடகிழக்கில் பிளவு அரசியல் இருந்தது.

ஆனால் இப்போது அதை தெய்வீக ஆட்சியாக மாற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம் இயந்திரமாகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. ஆனால் பாஜகவோ இந்த எட்டு மாநிலங்களை அதிர்ஷ்டமாக பார்க்கிறது என கூறினார். மேலும் நாகலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபடுகிறது எனக் கூறிய அவர் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டங்கள் மாநிலத்தில் இன்னும் முழுமையாக்கபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.