உலகம் முழுவதிலும் பல மில்லியன் கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதில் வாட்ஸ்அப் வாய்ஸ் கால், வீடியோ கால், நண்பர்களுடன் உரையாடுதல், சாட்டிங், குரூப் சாட்டிங் போன்றவற்றிற்கு  மக்கள் இன்றைக்கு வாட்ஸ் அப்பை நாடியுள்ளனர். அதிலும் குறிப்பாக தற்போது ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம் அதிகமாகி உள்ளது. தான் என்ன மனநிலையில் இருந்தாலும் அதற்கு தகுந்தார் போல் whatsapp ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கத்தை மக்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இப்படி அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாக மாறிய வாட்ஸ் அப்பின் நிறுவனமான மெட்டா  அவ்வபோது புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பல புதிய அம்சங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து சிறப்பு அம்சங்களை நாம் காண்போம்.

யூசர்களை தேர்வு செய்தல்: வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் என்ன வீடியோ வைக்கின்றார்கள், என்ன புகைப்படம் வைக்கின்றார்கள் என்பதை பார்க்க ஒரு கூட்டம் காத்திருக்கும். இருப்பினும் அனைவரும் நம்முடைய ஸ்டேட்டஸை பார்ப்பது நமக்கு பிடிக்காது. இது போன்றவற்றை தடுக்கும் விதமாகத்தான் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் யார் உங்களுடைய ஸ்டேட்டஸை பார்க்கலாம் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும். privacy settings என்ற ஆப்ஷன் உதவியுடன் இதனை செய்து கொள்ளலாம்.

whatsapp குரல் பதிவு: யூசர்கள் தங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும், காதல் பாடல்களையும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அல்லது எழுத்துக்கள் மூலமாக 30 வினாடி வரை பகிர்ந்து கொள்வார்கள். தற்போதுள்ள புதிய அப்டேட்டின் படி இனிமேல் நீங்கள் whatsapp ஸ்டேட்டஸில் உங்களது குரல் பதிவில் 30 வினாடிகளுக்கு ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளலாம்.

வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்கள்: எமோஜிகளின் மூலமாக மெசேஜ்களுக்கு ரியாக்ஷன் அனுப்புவது என்பது வாட்ஸ்அப் பயனர்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு அம்சமாகும். தற்போது நமக்கு வரக்கூடிய மெசேஜ்களை மேலே ஸ்வைப் செய்வதன் மூலமாக எட்டு எமோஜிகளில் ஒன்றை தட்டி அனுப்பலாம். இது மட்டுமல்லாமல் ஆடியோ மற்றும் குரல் வழியாக பதில் அளிக்கும் விருப்பமும் வாட்ஸ் அப் அப்டேட்டில் உள்ளது.

புதிய ஸ்டேட்டஸ்களை காட்டும் பச்சை நிற வளையங்கள்: whatsapp ஸ்டேட்டஸ் அப்டேட்டில் கொண்டு வரும் மற்றொரு இன்ஸ்டாகிராம் அம்சம் எந்த புதிய ஸ்டேட்டஸ் அப்டேட்ற்க்கும் பச்சை நிற வலை போன்று  காணப்படும். அது உங்கள் வாட்ஸ் அப்பில் உள்ள நபர் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார் என்பதை குறிக்கும்.

கடைசியாக கூடுதலாக whatsapp ஸ்டேட்டஸில் உங்களால் லிங்குகளையும் பதிவிட முடியும் அப்படி பதிவிடும் போது அந்த லிங்க்கான ஒரு பிரிவியூவை அந்த ஸ்டேட்டஸ்களில் காணப்படுகிறது. இதன் மூலமாக லிங்கிற்கு செல்லாமலே உங்களால்  அது எதனை பற்றிய பதிவு என்பதை காண முடிகிறது.