கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதாவது பிரச்சாரம் முடிந்த கையோடு இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் காங்கிரஸ் கட்சி 105 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 32 இடங்களிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக கட்சி கர்நாடகாவில் 40 சதவீதம் கமிஷன் அடித்துள்ளது என்றும் இது குறித்து புகார் கொடுக்கலாம் என்றும் ராகுல் காந்தி அறிவித்தார். இது தொடர்பான புகாரை 40percentsarkara.com என்ற இணையதள முகவரியை அறிமுகப்படுத்தியதோடு, இதை பிரபலப்படுத்துவதற்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டார். இந்த வீடியோ வெளியான நிலையில் தற்போது டுவிட்டரில் #ByeByeBjp என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.