தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஏற்கனவே டுவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமிலும் இணைந்துள்ளார். நடிகர் விஜய் லியோ படத்தின் கெட்டப்பை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஹலோ நண்பா நண்பிஸ் என்று பதிவிட்டுள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்த நிலையில் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

அதாவது நடிகர் விஜயின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பாலோயர்கள் குவிந்து வருகிறார்கள். இதன் மூலம் உலக அளவில் மிக வேகமாக ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் விஜய். பிடிஎஸ் 43 நிமிடங்களில் ஒரு மில்லியன் ஃபாலோயர்களை பெற்று முதலிடத்திலும், ஏஞ்சலினா ஜூலி 59 நிமிடங்களில் ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்று இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். மேலும் தற்போது நடிகர் விஜய் 99 நிமிடங்களில் ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார். நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்ததால் தற்போது டுவிட்டரிலும் அவர் டிரெண்டாகி வருகிறார்.