தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ஹீரோவாக ரவிகிருஷ்ணாவும் ஹீரோயினாக சோனியா அகர்வாலும் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முயற்சியில் இயக்குனர் செல்வராகவன் இறங்கியுள்ளதாகவும் படத்தின் ஷூட்டிங் வருகின்ற ஜூன் மாதத்தில் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பிறகு 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் ஹீரோவாக ரவி கிருஷ்ணா தான் நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது அவருக்கு 20 வயது அதிகமாக இருந்தாலும் இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இரண்டாம் பாகத்தில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடிப்பாரா அல்லது வேறு யாரேனும் ஹீரோயினாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2 வரும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.