தமிழகத்தில் கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் ஆகவும் கூடுதல் கலெக்டர் ஆகவும் பதவி ஏற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர் பழனி. இவர் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பதவிக்கு ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஷேக் அப்துல் ரகுமான் மனைவியான பத்மஜாவும் விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக நியமனம் செய்யப்பட உள்ளார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் பதவிகளை கணவன், மனைவியான ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் பத்மஜாவும் பதவியேற்க உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே கூடுதல் கலெக்டராக இருந்த குருதஞ் ஜெய் நாராயணன் என்பவர் தமிழக அரசின் மின் ஆளுமை முகமை கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் காலியாகிய விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பணிக்கு பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளார். பத்மஜா தமிழக அரசின் பொதுத்துறை செயலாளராக ஏற்கனவே பணியாற்றி வந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் ஒரே மாவட்டத்தில் கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் பதவிகளை அலங்கரிப்பது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது