செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நேற்று ராமநாதபுரத்தில் தமிழகத்தினுடைய முதலமைச்சர் பேசுகின்ற போது ராமேஸ்வரம் சர்வதேச சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என அறிவித்தாரே ? செயல்படுத்தினாரா ? என்று கேட்டிருக்கிறார். தனுஷ்கோடி வரை நெடுஞ்சாலைதுறை வாயிலாக சாலை அமைத்து,

இன்று பாரதத்தினுடைய எந்த பகுதி மக்கள் வந்தாலும் ராமநாதசாமியை தரிசித்து, அதற்குப் பின்பாக தனுஷ்கோடினுடைய முனை வரை செல்லக்கூடிய அந்த சாலையை அமைத்திருப்பது பிரதமர் மோடி அவர்கள். இன்று தமிழகத்தினுடைய பெருமையாக இருந்து நமக்கெல்லாம் மிகச்சிறந்த ஜனாதிபதியாக வாழ்ந்து காட்டி மறைந்தாரே,  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.

அவர்கள் பெயரிலே ஒரு நினைவு மண்டபத்தை அமைத்து,  இன்றும் ஆன்மீக சுற்றுலா மட்டுமல்லாமல்ல அது ஒரு அறிவு சுற்றுலாவும்  மாற்றுவதற்கு உதவி செய்தவர் நரேந்திர மோடி அவர்கள். ராமேஸ்வரம் இந்திய நாட்டிலேயே மிக முக்கியமான ஆன்மிக தளம்.  ராமேஸ்வரம் வந்தால் அக்னி தீர்த்த கடலிலே குளிக்க வேண்டும் என்பதுதான் லட்சக்கணக்கான பக்தர்கள் உடைய  லட்சியம்.

இன்றைக்கும் உள்ளூர் நிர்வாகத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கின்ற…  தமிழகத்தினுடைய நகர்புறம் மற்றும் உள்ளாட்சித் துறைகளை எல்லாம் கையில் வைத்திருக்கிற கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு,  இன்று அக்கினி தீர்த்த கடலிலே  நகரில் இருக்கக்கூடிய கழிவுகளை எல்லாம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு எங்கள் பிரதமர் முயற்சி செய்கிறார்.

ஆனால் அதை மேம்படுத்துவதும், அதை அழகாக மக்கள் பயன்படுத்த வேண்டும் விதத்தில் அதை மாற்ற வேண்டியதும் மாநில அரசினுடைய கடமை. மாநில முதல்வர் கோயிலுக்கு போக மாட்டார்.  அவர் எப்படி  இந்து பண்டிகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டாரோ, அந்த மாதிரி கோயிலுக்கு போக மாட்டார். அது அவர்களுடைய தனிப்பட்ட நம்பிக்கை.

ஆனால் அவருடைய மனைவி செல்கிறார். அவராவது கோவில்கள் இருக்கின்ற நிலைமை எல்லாம் மாநிலத்தினுடைய முதல்வருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அங்கு வருகின்ற பக்தர்களுக்கு எல்லாம் வசதி ஏற்படுத்த வேண்டும்.

கைத்தறி ரகங்கள் தமிழகத்தில் இருக்கின்ற ரகங்களை எல்லாம் பிரபலப்படுத்துகின்ற நோக்கத்திலே…  தமிழகத்தினுடைய அரசு,  தமிழகத்தினுடைய பாரம்பரிய ரகங்களை எல்லாம் உலக அரங்கிலே..   அதை விற்பனை செய்யக் கூடிய வகையில் கைத்தறி நெசவாளர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்த நேரத்தில் தமிழக அரசை நாங்கள் வலியுறுத்திக்கிறோம்.

சமீபத்திலே திருநெல்வேலி மாவட்டத்திலே ”செடிபூட்டா”  என்ற கைத்தறி ரகத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் வாயிலாக தமிழகத்தினுடைய கைத்தறி நெசவாளர்கள், குறிப்பாக திருநெல்வேலியினுடைய நெசவாளர்களுக்கு உலகளவில் ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நெசவாளர்கள் மக்கள் சார்பாக… நெசவாளர் பிரிவு சார்பாக இந்த நேரத்தில் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.