செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, தமிழக சட்டசபையில் நான் துணை சபாநாயகராக இருந்தவன் தான். அந்த நேரத்தில்  திட்டமிட்டு என்ன நடந்து என்று தெரியும். அம்மா ராஜினாமாவே செய்யவில்லை ? அந்த கடிதத்தை எடுத்தது யார் ? அன்னைக்கு உள்துறை அமைச்சராக இருந்தவர் கருணாநிதி தான். நிதி அமைச்சராக இருந்ததும் கருணாநிதி அவர்கள் தான்.

அம்மா என்ன கேள்வி கேட்டார்கள் ? நீங்க ஹோம் மினிஸ்டரா இருக்கீங்க…  என்னுடைய கடிதத்தை எப்படி நீங்கள் திருடி கொண்டு வரலாம் ? ஆகவே இது உரிமை பிரச்சினை என்று தான் சொன்னார்கள். உடனே திமுககாரங்க என்ன செஞ்சாங்க ? எல்லாம் போய் சேலையை இழுத்தாங்க. நடந்த விஷயம் எல்லாம் தெரியும். அவங்க கேட்ட கேள்வி நீங்க பத்திரிகையில் போட்டீங்க. கேள்வி கேட்டது அம்மா…  உரிமை பிரச்சனை, கேள்வி கேட்கலாம்.

எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, அவர்கள் சட்டமன்றத்திலேயே சபாநாயகரிடம் கேட்டு தன்னுடைய உரிமை பிரச்சினை பேசுவதற்கு உரிமை உண்டு.  நாடாளுமன்றத்திலே 15 ஆண்டுகளாக சபை நடத்துகின்றவன் நான்.  நாடாளுமன்றத்திலும் உரிமை பிரச்சனை பேச உரிமை உண்டு.

அந்த உரிமை பிரச்சினை தான் அம்மா அவர்கள் எழுப்பினார்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதியும், கூட இருந்த துச்சாதனன் எல்லாம் சேர்ந்து நடத்திய நாடகம். அம்மாவுக்கு தொல்லை கொடுத்தது. எல்லோரும் நீங்கள் டிவியில் போட்டு இருக்கீங்க. இந்த நாடகம் அம்மா செய்யல. இது திமுக நடத்திய நாடகம், வன்முறை கூத்தை  நடத்தினார்கள் என தெரிவித்தார்.