திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கின் கைது விவகாரத்தை அதிமுக அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு, அவனுக்கு திமுகவில் கட்சி அங்கீகாரம் அளித்த முதல்வர் ஸ்டாலின், நெருக்கம் காட்டிய உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தி இருந்தார். இதனைத்தொடர்ந்து, #Resign_Stalin, #Resign_Udhayanidhi  ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரெண்டிங் செய்கின்றனர்.