
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான CLAT 2025 நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 15ஆம் தேதி இன்று தொடங்குகின்றது. இந்தத் தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் நான்காயிரம் ரூபாய், எஸ்சி எஸ்டி பிரிவினர் 3500 விண்ணப்ப கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் இளநிலை படிப்புக்கு 45 சதவீதம், முதுகலை படிப்புக்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் பிளஸ் 2வில் பெற்று இருப்பது அவசியமாகும். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் இன்று முதல் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்