
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இந்தியா வரவேற்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, இந்த ஒப்பந்தம் காசாவில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமானமுள்ள உதவிகளை வழங்கும் என்று இந்தியா நம்புகிறது.
காசாவில் நடைபெறும் போர் நிறுத்தம் பணையகைதிகள் விடுதலை குறித்த ஒப்பந்தம் மிகவும் வரவேற்கத்தக்கது. அனைத்து பிணையகைதிகளாக இருக்கும் மக்கள் விடுவிக்கப்படவும், போர் நிறுத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.