பிரான்சில் கிளையுடன் கூடிய முன்னணி ஐரோப்பிய பன்னாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான Airbus, Montoir-de-Bretagne இல் உள்ள நிறுவனமானது  தனது ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது. ஏறத்தாழ 2,600 ஊழியர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டன. இருப்பினும், 24 மணி நேரத்திற்குள், சுமார் 700 ஊழியர்களுக்கு கடுமையான வயிற்று வலி, தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்போது குடல் அழற்சி நோய்க்கான  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையை சுகாதார துறை தற்போது தொடங்கியுள்ளது. ஏர்பஸ் நிறுவனம் சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாக உறுதியளித்து, உணவு மாதிரிகளை பகுப்பாய்விற்காக பாதுகாத்து வருகிறது. மேலும் சுகாதார பிரச்சினைகளுக்கான காரணம் ஆராயப்படுவதால், விசாரணை முடிவடைய சில நாட்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.