இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதீத வளர்ச்சியை அடைந்துவிட்டது. தற்பொழுது உலகம் முழுவதுமேAI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாகி வருகின்றது. அதாவது மனித தேவைகளை குறைக்கும் விதமாக இந்த தொழில்நுட்பத்தின் மூலமாகவே செய்திகள் வாசிப்பது என ஏகப்பட்ட தொழில்நுட்பம் வர ஆரம்பித்துவிட்டது. ஏன் ஒருவருக்கு எப்போது மரணம் வரும் என்பதை AI மூலம் கண்டறிய முடியும் .

இந்நிலையில் இந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வருகையால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் பிரபல யுபிஐ செயலியான பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ‘ஒன் 97 கம்யூனிகேஷன்’. இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பளச் செலவில் 15% மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக பேடிஎம்மில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவர்கள் செய்து வந்த வேலையை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.