பாகிஸ்தானில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என், இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதில், இந்து சமூகத்தைச் சேர்ந்த சவீரா பிரகாஷ் என்ற பெண், புனர் மாவட்டம், கைபர் பக்துன்க்வாவின் பிகே-25 தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது உலக அளவில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இது வரலாற்றில் நடைபெற்ற சிறப்பு மிக்க சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  ஓய்வுபெற்ற மருத்துவரான சவீரா, அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.  தற்போது PPP இன் புனர் மாவட்ட மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றுகிறார். அவரது வேட்புமனுத்தாக்கல் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய திருத்தத்தின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. அதன்படி,

பொது அலுவலகங்களில் பெண்களுக்கு ஐந்து சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு நேர்காணலில் பேசிய  சவீரா,  தனது தந்தையின் வழியைப் பின்பற்றி, பெண்கள் மற்றும் விளிம்புநிலை சமூக மக்களின்  முன்னேற்றம் மற்றும் உரிமைகளுக்காகப் பணியாற்றுவதற்காக பாடுபடுவேன் அதற்காகவே வேட்புமனு தாக்கல் செய்தேன் என தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.