விழுப்புரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் சித்திரை முழு நிலவு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று நடைபெறுகிறது. பாமக சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டு பெருவிழாவிற்காக 100 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பாமக தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைந்துள்ள 63 டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநாட்டின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காகவும், அசம்பாவிதங்கள் நடப்பதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.