
பிரபலமான யூனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் (UCL) ஆய்வாளர் படிக்கும் சீனப் பிஎச்.டி மாணவர் ஜென்ஹாவ் ஸோவ் (28) மீது 23 பெண்கள் பாலியல் வன்முறை புகார் அளித்துள்ளனர். கடந்த மாதம், 10 பெண்களை மயக்க மருந்தை குடுத்து பலாத்காரம் செய்ததற்கும், அதனை மறைமுக கேமராவால் வீடியோவாக பதிவு செய்து நியாபகமாக வைத்திருந்ததற்கும் அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் தான் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீதிபதி ரொசினா காட்டேஜ் கூறுகையில், ஸோவ் “அதிர்ச்சிகரமான, அபாயகரமான குற்றவாளி” என்றும், ஜூன் மாதத்தில் அவருக்கு தண்டனை விதிக்கப்படும் போது, அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்வார் என்று எச்சரித்தார். மெட்ரோபொலிடன் போலீசார், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ளும்படி அழைப்பு விடுத்தனர். அவரது வீட்டில் இருந்து கிடைத்த வீடியோக்களில் அடையாளம் தெரியாத 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான காட்சிகள் இருந்தன.
மேலும், அவர் பாதிக்கப்பட்டவர்களின் நகை, உடைகள் போன்றவற்றை வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இவர், குறிப்பாக இளம் சீன பெண்களை குறிவைத்து, அவர்களை தனது வீட்டிற்கு ‘படிக்க’ அல்லது ‘குடிக்க’ அழைத்து வந்து மயக்க மருந்து குடுத்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இந்த வாரம், மேலும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து புகார் அளித்துள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டவர்களா என தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் கமாண்டர் கேவின் சவுத் வொர்த் கூறுகையில், உலகத்தின் எங்கு இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் எங்களை தொடர்புகொள்ள வேண்டும்” என தெரிவித்தார். இது போன்ற அதிர்ச்சிகரமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வருவது சமூகத்தில் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.